×

நோட்டாவுக்கும், பாஜவுக்கும் தான் போட்டி தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடியை மக்கள் நிராகரிப்பார்கள்

1தமிழத்தில் திமுகவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை பிடிப்பதில் அதிமுக பாஜவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா? பதில்: பாஜ 2வது இடத்திற்கு வருவதற்கு முயற்சி செய்கிறது. அதுமட்டுமல்ல எப்படியாவது, பாஜ போட்டியிடும் தொகுதிகளில் காப்பு தொகையை திரும்ப பெற்று விட வேண்டும் என்றுதான் களத்தில் நிற்கிறார்கள்.

ஆனால் வெளி தோற்றத்தில் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்குவதற்கு உண்டான முயற்சியை மோடியும், அண்ணாமலையும் செய்து வருகிறார்கள். பாஜவை பொறுத்தவரை அனைத்துமே மாய தோற்றம் தான். உண்மையில் நோட்டாவுக்கும்- பாஜவுக்கும் இடையே தான் போட்டி. அதுதான் உண்மை. பிரதமரை பயன்படுத்தி வளர்ந்துவிட்ட ஒரு பெரிய கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.

2பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர காரணம் என்ன?
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவது பாஜ வெற்றி பெறுவதற்காக அல்ல. பாஜவுக்கான வாக்கு வங்கி சதவீதத்தை கொஞ்சமாவது உயர்த்த வேண்டும் என்றுதான் வருகிறார். இந்தியாவில் பாஜ கூட்டணி தோற்று போகும் என்று பாஜவுக்கும், மோடிக்கும் நன்றாகவே தெரியும். பிரதமர் என்கிற முறையில் உளவுத் துறை மூலம் 543 தொகுதிகளின் கள நிலவரத்தை தெரிந்து கொள்கிற வாய்ப்பான இடத்தில் அவர் இருக்கிறார்.

குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும். வாக்குகள் கொஞ்சம் அதிகம் வாங்கி விட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் பேரம் பேச வாய்ப்பாக அமையும் என்ற நோக்கத்தோடு திரும்ப திரும்ப வருகிறார். அவர் எத்தனை முறை இங்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை நிராகரிப்பார்கள். ஏனென்றால் தமிழகத்துக்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருவது நாடறிந்த உண்மை. எனவே நோட்டாவுடன் போட்டி போடத் தான் அவர்களால் முடியும்.

3எந்த காலத்திலும் பாஜவுடன் இனி கூட்டணி கிடையாது எனக் கூறிவரும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை விமர்சிக்காமல் அடக்கி வாசிப்பது ஏன்? எந்த காலத்திலும் பாஜவோடு உறவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்க இயலாது. 10 ஆண்டு காலத்தில் அவர் முதல்வராக இருந்த போது தான் குடியுரிமை திருத்த சட்ட மசோதா வந்தது. உண்மையிலேயே அதிமுக விரும்பியிருந்தால் ராஜ்யசபாவில் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் அந்த மசோதா தோற்று போயிருக்கும். அப்படி ஒரு அரிய நல்ல வாய்ப்பு எடப்பாடிக்கு கிடைத்தது. ஆனால் அதை நழுவ விட்டுவிட்டு பாஜவுக்கு ஆதரவாக இருந்தார்.

விவசாயிகளுக்கு எதிர்ப்பாக சட்டம் நிறைவேற்றிய போது எதிர்ப்பாக இருந்தது அதிமுக. இதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார். இன்று வரை மோடியை அவர் விமர்ச்சிக்கவில்லை. மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட முடியாது என்று ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு கூட குறைந்தபட்சம் கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை. கண்டிக்க கூட தயாராக இல்லாத போது, எப்படி பாஜவோடு உறவு முறிந்து விட்டது என்று சொல்வதை மக்கள் எப்படி ஏற்பார்கள். நம்புவார்கள். பாஜவை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி அச்சப்படுகிறார்.

4அண்ணாமலையின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலை என இரண்டு பேருமே ஒன்று தான். இருவருக்கும் என்ன தேவை என்றால் தினமும் அவர்களை பற்றி ஏதாவது செய்தி வர வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானலும் சொல்வார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்ச செருப்பு என்று சொன்னார். கடுமையான கண்டனத்திற்கு ஆளானார். தொடர்ந்து தவறான கருத்துகளை சொல்லி வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்ைத கொச்சைபடுத்தி பேசுகிறார் என்றால் அவரை என்ன சொல்வது?. அவரை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் அலட்சியப்படுத்துகிற கருத்துகளை மட்டுமே சொல்லி வருகிறார்.

The post நோட்டாவுக்கும், பாஜவுக்கும் தான் போட்டி தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடியை மக்கள் நிராகரிப்பார்கள் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,NOTA ,BJP ,AIADMK ,DMK ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...